சர்வதேச தீவிரவாதி பின்லேடன் பாகிஸ்தானில் அபோதாபாத் நகரில் ஒரு பங்காளவில் பதுங்கி இருந்த போது அமெரிக்க படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அமெரிக்காவின் நியூயார்க் நகர வர்த்தக மைய கட்டிடம் தகர்க்கப்பட்டது தொடர்பாக 10 ஆண்டுகளாக பின்லேடனை அமெரிக்கா தேடி வந்தது.
பின்லேடன் முதலில் ஆப்கானிஸ்தானில் பதுங்கி இருந்தார். அங்கு அமெரிக்க படை தாக்குதல் நடத்தியதால் பாகிஸ்தானுக்கு தப்பி வந்தார். கடந்த 2-ந் தேதி காலை பின்லேடன் பதுங்கி இருந்த இடத்தை கண்டுபிடித்து அமெரிக்கா தீர்த்து கட்டி விட்டது. பாகிஸ்தானுக்கு தெரியாமலேயே அமெரிக்கா இந்த தாக்குதலை நடத்தியது.
இது பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி யையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அமெரிக்காவுக்கு, பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்தது. பாகிஸ்தானில் இருக்கும் அமெரிக்க படைகள் படிப் படியாக வாபஸ் பெற வேண்டும், இனி தங்களுக்கு தெரியாமல் அமெரிக்க படைகள் பாகிஸ்தானில் எந்த இடத்திலும் தாக்குதலில் ஈடுபடக் கூடாது, இதன் மூலம் அமெரிக்கா-பாகிஸ்தான் நட்புறவு முறிந்தாலும் கவலை இல்லை என்று பாகிஸ்தான் ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்து இருந்தார்.
ஆனால் இந்த எச்சரிக்கையை மீறி அமெரிக்கா நேற்று மீண்டும் பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லையில் வடக்கு வசிரிஸ்தான் மலைப்பகுதி உள்ளது. இது அல்கொய்தா மற்றும் தலிபான் தீவிரவாதிகள் நடமாட்டம் உள்ள இடமாகும். இங்கிருந்து ஏராளமான தீவிரவாதிகள் வாகனத்தில் செல்வதாக அமெரிக்க படைக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அந்த வாகனம் மீது அமெரிக்க படைகள் ஆளில்லா விமானங்கள் மூலம் ஏவுகணை களையும், ராக்கெட்டுகளையும் வீசி தாக்குதல் நடத்தின. இதில் அந்த வாகனம் துள் தூளானது. அதில் பயணம் செய்த 15 தீவிரவாதிகள் உடல் சிதறி பலியானார்கள். ஒரு ஏவுகணை தாக்கிய தில் ரோட்டோரம் இருந்த ஒரு ஓட்டலும், ஒரு வீடும் சேதம் அடைந்தது. பொதுமக்களில் ஒருவரும் பலியானார்.
பின்லேடன் அமெரிக்க ராணுவத்தால் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு பின் முதன் முதலாக தீவிரவாதிகள் மீது அமெரிக்க ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் இந்த தாக்குதலால் பாகிஸ்தான் அதிர்ச்சி அடைந்துள்ளது.

No comments:
Post a Comment