சில நாட்களுக்கு முன்பு சோப்பு கம்பெனிக்கு நடிகை தமன்னா ஆப்பு வைத்த விவகாரத்தைப் போலவே மீண்டும் ஒரு நிகழ்வு நடந்தேறியிருக்கிறது. தமன்னா விவகாரத்தைப் பொறுத்தவரை, ராயல்டி எதுவும் கொடுக்காமல் இருந்ததால் தனது படத்தை விளம்பரத்தில் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் வழக்கு தொடர்ந்தார். அதில் தடையாணையும் பெற்று விட்டார். ஆனால் இப்போது புதிதாக வந்திருக்கும் விவகாரம் சற்றே வில்லங்கமானதும் கூட!
தாரம் என்ற பெயரில் உருவாகியிருக்கும் புதிய படத்தின் நாயகியான ஸ்வேதா மேனன், அந்த படத்திற்காக தப்பு தப்பாக, தாறுமாறாக ஆடையணிந்து போஸ் கொடுத்திருந்தார். அந்த ஸ்டில்களை ஆண்மைக்குறைவு லேகிய டப்பாவில் அச்சிட்டிருக்கிறார்களாம். திரையுலகில் அடுத்தடுத்த வாய்ப்புகள் பெற்று முன்னேறுவதற்காக ஆடைகளை துறந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்தபோது போகாத மானம், லேகிய டப்பாவில் அந்த படம் இடம்பெற்றதால் போய் விட்டதாம் அம்மணிக்கு! என் மானமே போச்சு என்று கதறிய ஸ்வேதா சம்பந்தப்பட்ட லேகிய ஆசாமிகளிடம் பல கோடிகள் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு போட்டிருக்கிறார். வேடிக்கை என்னவென்றால் இந்த படத்தை எடுத்த தயாரிப்பாளரும் தப்பவில்லை இதில். ஏனென்றால் இந்த போட்டோவை பயன்படுத்திக் கொள்ள அனுமதி கொடுத்தவரே அவர்தானாம். மானத்தை வாங்கிடுச்சே!

No comments:
Post a Comment