அஜீத்தின் 50-வது படம் மங்காத்தா. திரிஷா ஜோடியாக நடிக்கிறார். வெங்கட் பிரபு இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடந்தது. தற்போது ஐதராபாத்தில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடக்கிறது.
இதற்கிடையில் மங்காத்தா படத்தில் இடம் பெற்ற “விளையாடு மங்காத்தா” என்று துவங்கும் பாடல் சி.டி. இன்று வெளியானது. இந்த ஒரு பாடல் மட்டும் சி.டி.யில் இடம் பெற்றுள்ளது.இப்பாடல் சி.டி.க்களை வாங்க கடைகளில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.
பாடல் வெளியீடு பற்றி அஜீத் கூறும்போது, வெங்கட் பிரபு திறமையான இயக்குனர். இப்படத்தில் நடிப்பது சந்தோஷமான அனுபவம். யுவன்சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். ஏற்கனவே எனது பில்லா, தீனா படங்களுக்கு யுவன்சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். நல்ல வரவேற்பு இருந்தது. மங்காத்தா பாடலும் நன்றாக வந்துள்ளது என்றார்.

No comments:
Post a Comment