தமிழ் சினிமாவில் எல்லா நடிகைக்கும் ஆரம்பமே அதிர்ஷ்டமாக இருக்காது; அதில் ஒரு சிலர் மட்டும் விதிவிலக்கு. அந்த விலக்கு லிஸ்ட்டில் புதிதாக இணைந்திருப்பவர் ரிச்சா. செல்வராகவனின் இரண்டாம் உலகம் படத்தில் தனுஷ் ஜோடியாக ஒப்பந்தமாகியிருக்கும் இந்த மயில்விழியழகி, சிம்புவின் ஒஸ்தியிலும் புக் ஆகி விட்டார். ஒரே நேரத்தில் இரண்டு இளம் முன்னணி ஹீரோக்களின் ஜோடியானால் சாதாரணமான நடிகையே ரிச் ஆகும் போது, பெயரிலேயே ரிச்சை சுமந்திருக்கும் ரிச்சா ரிச் ஆக மாட்டாரா என்ன? எடுத்த எடுப்பிலேயே லட்சங்களில் சம்பளம் பேசி, சகல சம்பிரதாயங்களுக்கும் ஒத்துழைக்க அதாங்க... அவுட்டோர் சூட்டிங், பாரீன் பாட்டு சூட்டிங்... என சகலத்துக்கும் தயார் என ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறாராம்.
ஒரே நேரத்தில் இரண்டு இளம் ஹீரோக்களுடன் நடிப்பது பற்றி ரிச்சா அளித்துள்ள பேட்டியில், "வெற்றிப் படத்தில் இருக்க வேண்டும். அதுதான் என் ஆசை. இதற்காக எதையும் செய்யலாம். நடிகையானதன் நோக்கமே வெற்றி பெறுவதுதானே", என்று கூறியுள்ளார். இனியென்ன... செதுக்கி வைத்த சிலைபோல இருக்கும் ரிச்சா காட்டில் பண மழைதான்!

No comments:
Post a Comment