சமீபத்தில் தமிழ் திரையுலகில் தயாரிப்பு தரப்பில் அதிக லாபம் சம்பாதித்த படங்கள் 'காஞ்சனா' மற்றும் 'மங்காத்தா' . இரண்டு படங்களுமே தமிழக மக்களிடம் வரவேற்பை பெற்றன.
இரண்டு படங்களிலுமே நடித்தவர் லட்சுமிராய். 'காஞ்சனா' படத்தில் நாயகியாகவும், 'மங்காத்தா' படத்தில் ஒரு வில்லி பாத்திரத்திலும் நடித்து இருந்தார்.
அதன்பிறகு எந்த தமிழ் படத்திலும் நடிக்க இவர் ஒப்பந்தம் ஆகவில்லை. என்னவென்று விசாரித்தால் இவ்விரண்டு படங்களும் வெளிவரும் முன் 10 லட்ச ரூபாய் சம்பளம் வாங்கி வந்தவர், தற்போது நடிக்க 25 லட்சம் ரூபாய் சம்பளம் கேட்கிறாராம்.
காரணம் கேட்டால் "எனக்கு மார்க்கெட் இருப்பதால் தானே கால்ஷீட் கேட்கிறீர்கள் ! " என்று கறாராக சொல்கிறாராம்.
No comments:
Post a Comment