கதாநாயகிகள் சினிமாவில் நடிக்க ரூ.1 கோடி வரை சம்பளம் வாங்குகின்றனர். தமிழ், தெலுங்கு திரையுலகில் அதிக சம்பளம் பெறும் நடிகைகள் பட்டியலில் திரிஷா, அனுஷ்கா, இலியானா போன்றோர் உள்ளனர். பல நடிகைகள் விளம்பர படங்களில் நடித்தும் சம்பாதிக்கிறார்கள். சில வருடங்களுக்கு முன்பு ரூ.50 லட்சம் வரை விளம்பர படங்களுக்கு சம்பளம் கிடைத்தது.
ஆனால் தற்போது திடீரென குறைந்துள்ளது. திரிஷா, அனுஷ்கா போன்றோர் விளம்பர படத்தில் நடிக்க ஒருநாள் சம்பளமாக ரூ.7 லட்சம் நிர்ணயிக்கப் பட்டு உள்ளது. ஸ்ரேயா, சினேகாவுக்கு ரூ.5 லட்சமும் நயன்தாராவுக்கு ரூ.6 லட்சமும் பிரியாமணிக்கு ரூ.4 லட்சமும் சம்பளம் நிர்ணயித்துள்ளனர். நயன்தாரா ஒரு சில வருடங்களுக்கு முன் ஜவுளிக்கடை விளம்பர படமொன்றில் நடிக்க ரூ.1 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்பட்டது.
ஆனால் நடிகைகளை ஒப்பிடும்போது கதாநாயகர்களுக்கு கூடுதல் சம்பளம் அளிக்கின்றனர். நடிகைகள், தமிழ், தெலுங்கு, இந்திப்படங்கள் என மாறி மாறி நடிப்பதால் அவர்கள் மதிப்பு குறைந்துள்ளதாகவும் எனவேதான் விளம்பர பட ஊதிய விகிதம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
தீபிகா படுகோனே, ஐஸ்வர்யாராய் போன்றோர் இந்தியில் தொடர்ந்து முன்னணியில் இருப்பதால் அவர்களுக்கு விளம்பர படங்களுக்கான ஊதியம் நடிகர்களுக்கு இணையாக உயர்ந்த நிலையிலேயே உள்ளது.

No comments:
Post a Comment