சிம்பு, த்ரிஷா இருவருக்கும் தங்களது திறமையை வெளிக்காட்ட வழிவகுத்த படம் ' விண்ணைத்தாண்டி வருவாயா'. ஏ.ஆர்.ரஹ்மான் இசை, கெளதம் மேனன் இயக்கம் என இப்படம் தமிழக இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டது.
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் வரவேற்பை பெற்ற இப்படத்தின் இந்தி உரிமையை யாருக்கும் கொடுக்காமல் தானே இந்தியிலும் இயக்கி இருக்கிறார் கெளதம் மேனன்.
ப்ரதீக் பார்ப்பர், 'மதராசப்பட்டினம்' நாயகி ஏமி ஜாக்சன் இருவரும் முக்கிய வேடங்களில் நடித்து இருக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மானே இப்படத்திற்கும் இசையமைத்து இருக்கிறார். படத்திற்கு 'Ek Deewana Tha' என தலைப்பிட்டு இருக்கிறார்கள்.
ஜனவரி மாதம் வெளியாக இருக்கும் இப்படத்திற்கு எதிர்பார்ப்பை கூட்டும் வகையில் 20 நொடிகள் ஓடும் சிறு TEASER ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்கள்.
'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தில் இடம்பெற்ற ' என் இதயம் ' என்ற பாடலின் இந்தி பதிப்போடு அந்த TEASER வெளிவந்து இருக்கிறது.

No comments:
Post a Comment