“மைனா” படம் மூலம் பிரபலமானவர் அமலா பால். வேட்டை படத்தில் மாதவனுடன் நடித்து வருகிறார். தெலுங்கிலும் படங்கள் உள்ளது. ஐதராபாத்தில் நடந்த படப்பிடிப்பில் அமலாபால் அளித்த பேட்டி வருமாறு:-
நான் பிளஸ்-2 முடித்ததும் மாடலிங்குக்கு வந்தேன். அதன் பிறகு சினிமா வாய்ப்பு வந்தது. நான் நடிகையாவதை பெற்றோர் விரும்பவில்லை. எதிர்த்தார்கள். எனது அண்ணன் அவர்களை சமரசப்படுத்தினான். பெற்றோர் எதிர்ப்பை மீறி சினிமாவுக்கு வந்தேன். அவர்கள் என்னை என்ஜினீயருக்கு படிக்க வைக்கத்தான் ஆசைப்பட்டார்கள். மைனா படம் திருப்பு முனையாக அமைந்தது. பிறகு விக்ரமுடன் நடித்தேன்.
நான் விக்ரமின் தீவிர ரசிகை. அவருடன் நடித்தது அதிர்ஷ்டம். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் கல்லூரிக்கு போகிறேன். தோழிகள் படிப்பில் உதவுகின்றனர். சிந்து சமவெளி படத்தில் எனது வயதுக்கு மீறிய வேடம் அமைந்தது. வலுவான கேரக்டர்களில் நடிக்க ஆர்வம் நாகார்ஜுனா படத்தில் நடிக்கவும் வாய்ப்பு கிட்டியுள்ளது. முதல் தட வையாக பெரிய நடிகரான அவரை படப்பிடிப்பு தளத்தில் பார்த்த போது மயக்கமே வந்து விட்டது. ஸ்ரீதேவி எனக்கு பிடித்தமான நடிகை இப்போ தும் அவருக்கு மரியாதை இருக்கிறது.
நான் ஓட்டல்களில் நடக்கும் விருந்துகளில் பங்கேற்க ஆர்வப்படுவதாக கிசு கிசு பரப்பியுள்ளனர். அது தவறு. நான் அப்படிப்பட்ட பெண் அல்ல.

No comments:
Post a Comment