தனது இரண்டாவது திருமணம் பற்றி அடுத்த மாதம் அறிவிக்க இருப்பதாக சித்தார்த் கூறியுள்ளார். ‘பாய்ஸ்’ படம் மூலம் ஹீரோவானவர் சித்தார்த். இந்தி, தெலுங்கு படங்களில் நடித்துவரும் சித்தார்த், தற்போது, ‘காதலில் சொதப்புவது எப்படி’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். அவர் கூறியதாவது: நான் நடித்துள்ள ‘ஓ மை பிரண்ட்’ என்ற தெலுங்கு படம் ரீச் ஆகியுள்ளது. இதில் நான் இன்னும் இளமையாக இருப்பதாகக் கூறுகின்றனர். வெளிப்புறத் தோற்றத்தில் மட்டுமல்ல, மனசுக்குள்ளும் எப்போதும் இளமையாகவே இருக்கிறேன். ‘இனி தெலுங்கு படத்தில் மட்டும்தான் நடிப்பேன்’ என்று நான் சொன்னதாக கேட்கிறார்கள். அப்படி ஒரு போதும் நான் சொன்னதில்லை. ஆதாரம் இருந்தால் நீங்கள் காண்பிக்கலாம்.
அது தவறான தகவல். நடிகன் என்பவனுக்கு மொழி முக்கியமில்லை. இப்போது கணிதமேதை ராமானுஜத்தின் வாழ்க்கை வரலாறு பற்றிய தமிழ்ப் படத்தில் நடிக்கிறேன். சினிமாவில் நடிக்க வந்து 11 வருடம் ஆகிவிட்டது. அடுத்த வருடம் எனக்கு முக்கியமான வருடமாக இருக்கப் போகிறது. சினிமாவில் மட்டுமல்லாமல், என் சொந்த வாழ்க்கையையும் சேர்த்து சொல்கிறேன். அந்த முக்கியமான விஷயத்தை ஒரு மாதத்துக்குப் பின் அறிவிக்க இருக்கிறேன். அது திருமணமா என்று கேட்காதீர்கள். அதற்காக நீங்கள் ஒரு மாதம் காத்திருக்கத்தான் வேண்டும். இவ்வாறு சித்தார்த் கூறியுள்ளார்.
சித்தார்த், தனது கேர்ள்பிரண்ட் மேக்னாவை 2003-ம் வருடம் திருமணம் செய்தார். 2006-ல் விவாகரத்துப் பெற்றார். இடையில் ஸ்ருதிஹாசனை காதலித்து வந்ததாகவும் இவர்கள் காதல் கடந்த சில மாதங்களுக்கு முன் முடிவுக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment