2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக நிதி அமைச்சக அறிவுரைகளை ஆ. ராசா நிராகரித்தார் என்று மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ள கருத்துக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்கள் இது தொடர்பாக கேள்வி எழுப்பினர்.
கேள்வி: தொலை தொடர்புத்துறை அமைச்சர் கபில்சிபல் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, ராசாதான் ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடுகளை வழங்கினார், அதிலே பிரதமருக்கோ, அப்போதிருந்த நிதி அமைச்சருக்கோ தொடர்பு இல்லை என்று சொல்லியிருக்கிறாரே?
பதில்: அப்படி அவர் சொல்லியிருந்தால் அது மறுக்கக் கூடிய ஒன்றாகும். இதே மத்திய அமைச்சர் கபில்சிபல் தொடக்கத்தில் - முன் கூட்டி வருபவர்களுக்கு வழங்குவது என்பது இந்த ஆட்சியிலே அல்ல, கடந்த பா.ஜ.க. ஆட்சியிலே, 2003-ம் ஆண்டிலேயே இது தொடங்கப்பட்டு விட்டது என்று சொல்லியிருக்கிறார். அதை இப்போது அவரே மாற்றிச் சொல்கிறாரா என்று புரியவில்லை. தவறு செய்திருந்தால், பா.ஜ.க.
அமைச்சர்கள் யாராவது அவருடைய இடத்திலே இருந்து செய்திருந்தால், அதற்குரிய தண்டனையை அனுபவிக்க வேண்டியதுதான் என்றார் கருணாநிதி.
No comments:
Post a Comment