இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என பிரதமர் மன்மோகன்சிங்குக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் எழுதியுள்ள கடிதத்தில், இலங்கைக்கு ஆதரவாக மத்திய அரசு வாக்களிக்க இருப்பதாக வெளியான செய்திகள் துரதிருஷ்டவசமானவை. இவ்விஷயத்தில் நான் ஏற்கனவே அனுப்பியுள்ள கடிதத்திற்கு, மத்திய அரசிடமிருந்து பதில் வராதது வருத்தம் அளிக்கிறது. இலங்கை விவகாரத்தில் அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும்’ எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment