இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் ஐ.நா. மனித உரிமைப்புடனான அனைத்து உறவுகளையும் துண்டிப்பதாக அந்நாடு அறிவித்துள்ளது.
பாலஸ்தீனத்தின் உரிமையை அபகரிக்கும் வகையில் இஸ்ரேலிய குடியேற்றங்கள் அமைக்கப்படுகின்றனவா? என்பது குறித்து சர்வதேச அளவிலான விசாரணை நடத்த ஐ.நா. மனித உரிமை பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
பாகிஸ்தான் தலைமையில் இஸ்லாமிய நாடுகள் கடந்த வாரம் இத்தீர்மானத்தை கொண்டுவந்தன. அமெரிக்கா மட்டுமே தீர்மானத்தை எதிர்த்தது.
இதைத் தொடர்ந்து ஐ.நா. மனித உரிமை பேரவையுடனான உறவைத் துண்டிப்பதாக இஸ்ரேல் அறிவித்திருக்கிறது.
No comments:
Post a Comment