நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கூடங்குளத்தில் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ள அணுமின் நிலையத்திற்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தில் நக்சலைட்டுகள் ஊடுருவியுள்ளனர் என்கிற பரப்புரையை நாம் தமிழர் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
தமிழக காவல்துறை கைது செய்துள்ள இரண்டு பேர் நெல்லையில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் கைது செய்யப்பட்டிருப்பதும், அவர்கள் நக்சலைட்டுகள் என்றும், அவர்களுக்கும் கூடங்குளத்தில் போராடி வரும் மக்கள் போராட்ட குழுவினருக்கும் தொடர்பு உள்ளதா என்பதை புலனாய்வு செய்வோம் என்று கூறுவதும் அப்பகுதி மக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் செயலாகும்.
எனவே கூடங்குளத்தில் மக்கள் நடத்தி வரும் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதை தவிர்த்துவிட்டு, அவர்களின் நியாயமான அச்சத்தை போக்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment