இனி அமெரிக்க தயாரிப்பான கோக்கை இலங்கையில் புறக்கணிப்போம் என அரசு ஆதரவுடன் சிங்கள அமைப்புகள் போராட்டத்தை அறிவித்துள்ளன.
இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரின்போது, நடந்த மனித உரிமை மீறலுக்கு எதிராக ஐ.நா.சபையில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியது. இதற்கு இலங்கையில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
அமெரிக்காவுக்கு எதிராக சிங்கள வெறியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு அதிபர் ராஜபக்சேயின் ஆதரவும் உண்டு.
நேற்று தலைநகர் கொழும்பில் அமெரிக்காவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதில், சிங்களர்களும், புத்த மத துறவிகளும் கலந்து கொண்டனர். முன்னதாக கோட்டை ரெயில் நிலையத்தில் இருந்து புறக்கோட்டை போதிராஜவிகாரை வரை ஊர்வலம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தின்போது தேசிய அமைப்பு செயலாளர் பேசினார்.
அப்போது அவர் பேசும்போது, ''இலங்கை மீது அமெரிக்கா தனது ஆதிக்கத்தை செலுத்த பார்க்கிறது. ஐ.நா.மனித உரிமை பேரவையில் தீர்மானம் நிறைவேறியிருந்தாலும் அதன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த இலங்கை அரசு அனுமதிக்கக்கூடாது. அமெரிக்காவுக்கு நமது பலத்த எதிர்ப்பை தெரிவிப்பதன் மூலமே அதன் ஆதிக்க முயற்சியை தோற்கடிக்க முடியும். எனவே, அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களை, குறிப்பாக கோக கோலா இலங்கை மக்கள் புறக்கணிக்க வேண்டும்'' என்றார்.
ஆர்ப்பாட்டத்தின்போது, அதில் கலந்து கொண்டவர்களுக்கு துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டன. அதில், அமெரிக்காவின் உற்பத்தி பொருட்களான கோக கோலா, கோதுமை உள்ளிட்டவற்றை வாங்காமல் புறக்கணிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment