ஒரிசா மாநிலம் லஷ்மிபூர் தொகுதி எம்.எல்.ஏ.வை கடத்தியது தாங்கள்தான் என்று மாவோயிஸ்டுகளின் ஆந்திர- ஒரிசா எல்லையோர மண்டல கமிட்டி அறிவித்துள்ளது. கடத்தப்பட்ட எம்.எல்.ஏ. ஜிஹா ஹிகா மூலம் முதல்வர் நவீன்பட்நாயக்குக்கு கடிதம் ஒன்றையும் மாவோயிஸ்டுகள் அனுப்பி வைத்துள்ளனர்.
நவீன்பட்நாயக்குக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில், தாம் நலமுடன் இருப்பதாகவும் பாதுகாப்பாக இருப்பதாகவும் எம்.எல்.ஏ.ஜிஹா தெரிவித்துள்ளார்.
மேலும் இக்கடிதத்தில் மாவோயிஸ்டுகள் நிபந்தனைகளையும் விதித்துள்ளனர். மாவோயிஸ்டுகள் விதித்துள்ள நிபந்தனைகள்:
மாவோயிஸ்டுகளுக்கு எதிரான அனைத்து தேடுதல் நடவடிக்கைகளையும் உடனே நிறுத்த வேண்டும். சாஷி முலியா ஆதிவாசி என்ற அமைப்பின் தலைவர்கள் உட்பட அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவிக்க வேண்டும். அனைவரும் விடுவிக்கப்பட்ட செய்தியை ஊடகங்கள் மூலம் தெரியப்படுத்த வேண்டும். அதன்பின்னரே எம்.எல்.ஏ.வை விடுவிப்பது பற்றி அறிவிப்போம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுதங்களுடன் எம்.எல்.ஏ.வை கடத்தியது யார் என்ற குழப்பத்துக்கு விடையாக மாவோயிஸ்டுகள்தான் என்பது உறுதியாகியுள்ளது.
இந்த கடத்தல் விவகாரம் மாநில சட்டப்பேரவையில் கடுமையான அமளியையும் உருவாக்கியது. இதனால் அவை நடவடிக்கைகள் முடங்கின.
No comments:
Post a Comment