சசிகலா போயஸ் கார்டனுக்கு சென்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதல்வர் ஜெயலலிதாவின் உயிர்த் தோழி சசிகலா கடந்த டிசம்பர் மாதம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். ஆட்சிக்கு எதிராக சதி செய்ததாகக் கூறி அவரும், அவரது உறவினர்களும் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். 24 ஆண்டுகளாக வசித்து வந்த போயஸ் கார்டன் இல்லத்திலிருந்தும் சசிகலா மற்றும் உறவினர்களை வெளியேற்றினார் ஜெயலலிதா.
கடந்த சில மாதங்களாக சசிகலாவின் கணவர் நடராஜன், உறவினர்கள் ராவணன், திவாகரன் உள்பட பலர் புதுப்புது வழக்குகளில் கைது செய்யப்பட்டனர். திமுகவினருக்காகவே அறிமுகமான நில அபகரிப்பு வழக்குகள், சசிகலா வகையறா மீதும் பாய்ந்தன. அவர்கள் அனைவரும் தற்போது சிறையில் உள்ளனர்.
இந்நிலையில் சசிகலா இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் தான் என்றுமே ஜெயலிலதாவுக்கு துரோகம் நினைத்து இல்லை என்றும், எந்தவித பதவியில் இருக்கும் ஆசை தனக்கு இல்லவே இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே சசிகலா போயஸ் கார்டனுக்கு சென்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
No comments:
Post a Comment