ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தில் இலங்கை மீது அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது. வாக்கெடுப்பில் கலந்து கொண்டு இலங்கைக்கு எதிராக வாக்களித்தது. இந்தியாவின் இந்த முடிவால் இலங்கை கடும் ஆத்திரம் அடைந்துள்ளது. இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை அதிபர் ராஜபக்சே மறைமுகமாக கூறி வருகிறார்.
இதற்கிடையே, அனைத்து கட்சி எம்.பி.க்களின் இந்திய உயர்மட்டக்குழு இலங்கைக்கு பயணம் மேற்கொள்வதாக ஏற்கனவே திட்டமிடப்பட்டு இருந்தது. தற்போது அந்த பயம் ரத்து செய்யப்படலாம் அல்லது தள்ளிப்போகலாம் என தெரிய வந்துள்ளது. அமெரிக்கா ஐ.நா. தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்ததால் இந்தியா மீது இலங்கை கடும் ஆத்திரத்தில் உள்ளது.
அதனால் இப்பயணம் தற்போது உகந்தது அல்ல என மத்திய அரசின் ஆலோசகர்கள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு சுட்டி காட்டியுள்ளனர். இந்தியா மீதான கோபம் தணிந்த பின்னர் இது பற்றி சிந்திக்கலாம் என கூறியுள்ளதாகவும் தகவல் கள் தெரிவிக்கின்றன. இந்திய உயர்மட்ட குழுவின் இலங்கை பயணம் குறித்து தற்போது எதுவும் கூற முடியாது என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் கூறியுள்ளார்.
இலங்கை அரசுடன் இந்தியா தொடர்ந்து உறவு வைத்துள்ளதா? என வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவிக்கும் என்றும் அவர் தெரிவித்தார். ஜெனீவாவில் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் தனக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றிய அமெரிக்காவுக்கு இலங்கை அரசு பதிலடி கொடுத்துள்ளது.
இதன் ஒரு கட்டமாக கொழும்பில் அமெரிக்க அரசின் உயர்மட்ட அதிகாரி மைக்கல் ஜே டிலானி வருகிற 27-ந்தேதி முக்கிய உரை நிகழ்த்த இருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவரது உரை நிறுத்தப்பட்டுள்ளது. எனினும் வருகிற 27-ந் தேதி அவர் இலங்கை வருவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment