பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கும் ஏப்ரல் 4ந் தேதி, அரசு விடுமுறை என குறிப்பிடப்பட்டுள்ளதால் மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
4-ந் தேதி பொதுவிடுமுறை
பத்தாம் வகுப்பு பொது தேர்வு ஏப்ரல் 4ந் தேதி துவங்கி 23ந் தேதி வரை நடைபெறுகிறது. 4ந் தேதி தமிழ் முதல் நாள் என அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் 9ந் தேதி தமிழ் இரண்டாம் தாளுக்கான தேர்வு நடக்கிறது. 10ம் வகுப்பு தேர்வு தொடங்கும் ஏப்ரல் 4ந் தேதி மஹாவீர் ஜெயந்தி என அறிவித்து அரசு விடுமுறை என கலாண்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசு விடுமுறை அன்று பத்தாம் வகுப்பு தேர்வு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள், ஆசிரியர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது..
இதுகுறித்து உயர் கல்வி அதிகாரிகளிடம் கேட்டால் தேர்வுத்துறையில் இருந்து வந்த அட்டவணை என அவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் ஏப்ரல் 4ந் தேதி 10ம் வகுப்பு பொது தேர்வு தொடங்குமா, என சந்தேகம் எழுந்துள்ளது.
இதுகுறித்து கல்வி துறை வட்டாரங்கள் கூறுகையில், பத்தாம் வகுப்பு பொது தேர்வு கால அட்டவணையில் ஏப்ரல் 5ந் தேதி மகாவீர் ஜெயந்தி என அன்றைய தினம் தேர்வுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் 6ந் தேதி புனித வெள்ளிக்கு விடுமுறையும், சனி, மற்றும் ஞாயிற்று கிழமையான 6, 7 தேதிகளில் விடுமுறை அளித்து 9ந் தேதி தமிழ் 2ம் தாள் நடைபெறுகிற என்கின்றனர்.
இதனால் மகாவீர் ஜெயந்தி ஏப்ரல் 4ந்தேதியா, 5ந் தேதியா என்பதில் குழப்பம் நீடிக்கிறது. இந்த குழப்பத்திற்கு அரசு அதிகாரிகள் தீர்வு காண வேண்டும் என்பது மாணவர்களின் கோரிக்கை.
No comments:
Post a Comment