திருமணத்துக்குப்பின் கணவனோ அல்லது மனைவியோ செக்ஸ் உறவுக்கு மறுத்தால், அந்த தம்பதியருக்கு விவாகரத்து வழங்கலாம் என்று, டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.
இந்த பிரச்சினையில் பாதிக்கப்பட்ட கணவர், விவாகரத்து கோரி முதலில் கீழ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
திருமணம் ஆனதும் முதல் இரவிலும், தொடர்ந்து 5 மாதங்கள் வரையும் அவருடைய மனைவி செக்ஸ் உறவு வைத்துக்கொள்ள மறுத்ததால் அவர் விவாகரத்து கோரி இருந்தார்.
இந்த வழக்கில் கீழ் கோர்ட்டு அவருக்கு விவாகரத்து வழங்கியதை எதிர்த்து, அவருடைய மனைவி டெல்லி ஐகோர்ட்டில் அப்பீல் செய்து இருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி கைலாஷ் காம்பீர் விவாக ரத்து வழங்கிய கீழ் கோர்ட்டு தீர்ப்பு சரிதான் என்று தீர்ப்பு கூறினார்.
’’திருமணத்துக்குப்பின் தம்பதியரில் யாராவது ஒருவர் செக்ஸ் உறவுக்கு மறுத்தால், அது மற்றவரை கொடுமைப்படுத்துவதற்கு சமமாகும். திருமணத்துக்கான அடிப்படை பந்தமே செக்ஸ் உறவுதான்.
செக்ஸ் இல்லாத திருமணம் ஒரு சாபக்கேடு’’என்று, பல்வேறு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகளில் குறிப்பிடப்பட்டு இருப்பதை, நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டி இருந்தார்.
இந்த வழக்கைத் தொடர்ந்தவருக்கு கடந்த 1991-ம் ஆண்டு பிப்ரவரி 17-ந் தேதி திருமணம் நடைபெற்றது.
கீழ் கோர்ட்டில் தொடரப்பட்ட இந்த வழக்கில், கடந்த 2001-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் விவாகரத்து வழங்கி தீர்ப்பு கூறப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment