சீனாவில் ராணுவ புரட்சி ஏற்பட்டுள்ளதாக நிறையபேர் இணையதளம் மூலம் வதந்தியை பரப்பி உள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் சீன இணையதளத்தில் ராணுவ புரட்சி செய்தியை வெளியிட்டதுடன், தலைநகர் பீஜிங் நகர தெருக்களில் ராணுவ டாங்கிகளும், கவச வாகனங்களும் உலவுவது போன்ற படங்களையும் வெளியிட்டு இருந்தனர்.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சீன அரசின் தணிக்கைத்துறை அதிகாரிகள், அந்த இணையதள செய்தியை முடக்கி வைத்தனர். ராணுவ டாங்கி படங்கள், ராணுவ ஒத்திகையில் எடுக்கப்பட்ட பழைய படங்கள் ஆகும். சீன ஜனாதிபதி ஹு ஜின்டாவோவின் பதவிக்காலம் இந்த ஆண்டு இறுதியில் முடிவடைகிறது. அதையடுத்து, துணை அதிபர் ஜி ஜின்பிங், புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில் அதிபர் பதவியை பிடிக்க, ஆளும் கட்சியான சீன கம்யூனிஸ்டு கட்சியில் பெரும் அதிகாரப் போட்டியே நடந்து வருகிறது. இந்த போட்டியில், கட்சியின் முக்கிய பதவியை பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட போ ஜிலாய் என்பவரின் பதவி பறிக்கப்பட்டது. இதனால் அதிகார மாற்றம் சுமூகமாக நடைபெறுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இவ்விதம் ஆளும் கட்சியில் கோஷ்டி மோதல் உச்சகட்டத்தை அடைந்து வரும் நிலையில், ராணுவ புரட்சி வதந்தி அனைவரையும் நம்ப வைத்துள்ளது.
No comments:
Post a Comment