இடிந்தகரைக்குள் போலீஸ் படை நுழையப்போவதாக பரவிய தகவலால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கூடங்குளம் அணு மின் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அணு உலை பணிகள் அனைத்தும் தற்போது தொடங்கப்பட்டுவிட்டதால் அணு மின் நிலையம் மற்றும் அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு எவ்வித பாதிப்பு்ம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக கூடங்குளம் மற்றும் இடிந்தகரையில் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் கூடங்குளம் அணு மின் நிலைய பகுதிக்குள் அத்துமீறி யாரேனும் நுழைந்துவிடாமல் இருப்பதற்காக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ராதாபுரம் தாலுகா முழுவதும் 144 தடை உத்தரவு அமுலில் உள்ளதால் இடிந்தகரை மற்றும் கூடங்குளத்தை சுற்றிலும் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். இதுதவிர கூடங்குளம், இடிந்தகரை செல்லும் சாலைகளில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. போராட்டக்காரர்களை ஒடுக்க போலீசார் இவ்வாறு நடவடிக்கை எடு்த்திருக்கும் வேளையில், போலீசார் ஊருக்குள் நுழையாமல் இருக்க போராட்டக்காரர்களும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.
அவர்கள் இடிந்தகரை கிராமத்திற்கு வரும் அனைத்து சாலைகளிலும் தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளனர். இருந்தபோதிலும் போலீசார் எந்த நேரத்திலும் இடிந்தகரை கிராமத்திற்குள் நுழையலாம் என்ற சூழ்நிலை நிலவி வருகிறது. ஆகையால் போலீசார் ஊருக்குள் நுழைகிறார்களா என்பதை போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இந்நிலையில் போலீசார் ஊருக்குள் வரப்போவதாக இடிந்தகரையில் இன்று காலை தகவல் பரவியது. இதையடுத்து இடிந்தகரை பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் மணி அடிக்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆலயத்தில் ஊர் மக்கள் திரண்டனர். மேலும் இடிந்தகரையில் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் ஏராளமானோர் அங்கு வந்தார்கள்.
அவர்கள் அனைவரும் இடிந்தகரை கிராமத்தைச் சுற்றிலும் அரண்போல் நின்று கொண்டு கண்காணித்தனர். ஆனால் வெகு நேரமாக போலீசார் யாரும் ஊருக்குள் வரவில்லை. இதனைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு உண்ணாவிரதம் நடந்த இடத்திற்கு சென்றனர்.
தலைப்பு மாறி விட்டது. இனப் படுகொலைக்கு துணை போன கருணானிதி இப்படி சொல்வது வேடிக்கையாகவும்,கேவலமாகவும் உள்ளது.எப்படி எல்லாம் மாற்றி பேச இந்த அரசியல்வாதிகளால் முடிகிறது?இந்த தீர்மானம் ஒரு ராஜதந்திர நகர்வே தவிர எந்த விதத்திலும் நன்மை பயக்காது.இது கருணானிதிக்கு தெரிந்தும் மக்களை திசை திருப்ப பேசுகிறார்.எவ்வளவு நாட்களுக்கு?
ReplyDeleteஊழல் ஆட்சி மாறி அராஜக ஆட்சி ஆரம்பமாகி விட்டது.காந்தீயம் அகிம்சை என்னாயிற்று. ஒரே முடிவு இந்த இரு கட்சிகளும் ஓரம் கட்டப்பட்டு மூன்றாவது அணி வருவதே.
தவறுக்கு வருந்துகிறோம்...தவறை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி...
Delete