தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு குறித்து தி.மு.க., ஆட்சிக்காலத்தில் கருணாநிதியிடம் ஏற்கனவே எச்சரித்தேன், என தேவகோட்டையில் அமைச்சர் சிதம்பரம் பேசினார்.
அவர் கூறியதாவது-
தமிழகத்தில் கடந்த தி.மு.க., ஆட்சிக்காலத்தில் மின்வெட்டு அதிகமாக இருந்தது. இது குறித்து கருணாநிதியிடம் பல முறை எச்சரித்தேன். மின்வெட்டு அதிகரிக்கும் என ஏற்கனவே எனக்கு தெரியும்.
மின்வெட்டை தவிர்க்க அணல், அணுமின் திட்டங்களை தான் செயல்படுத்த முடியும். அணல் மின் திட்டத்திற்கு கூடுதல் செலவு ஏற்படும். 25 லட்சம் டன் நிலக்கரியை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை, 25 டன் யுரேனியத்தை பயன்படுத்தி உற்பத்தி செய்யமுடியும். இதற்காகவே அணுமின் திட்டத்தை வரவேற்கிறோம்.
கடந்த 20 ஆண்டுகளாக கட்டுமான பணிகள் 13,500 கோடி ரூபாயில் நடந்தபோது, சும்மா இருந்துவிட்டு தற்போது போராடுவது ஏன்? மேலும், இலங்கை பிரச்னையில் காங்கிரஸ் தவிர மற்ற கட்சிகள் இருவிதமாக பேசினர். இலங்கைக்கு எதிரான தீர்மானங்களில் கவனம் செலுத்தினோம்.
இவ்வாறு சிதம்பரம் தெரிவித்தார்.
No comments:
Post a Comment