டெல்லியில் இன்று பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
இதில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 7 சதவீதம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே மத்திய அரசின் அகவிலைப்படி 58 சதவீதத்திலிருந்து 65 சதவீதமாக உயர்வு பெற்றுள்ளது. இந்த உயர்வு ஜனவரி 2012 முதல் கணக்கில் கொள்ளப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
மேலும் இந்து திருமண சட்டத்திலும் திருத்தம் கொண்டு வர மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இத்திருத்தம் செய்யப்பட்டால் விவகாரத்து செய்வது எளிதாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே 6 மாதம் பிரிந்து வாழ்ந்தால் தான் விவகாரத்து பெற முடியும் என்ற நிலையிலிருந்து மாற்றம் ஏற்படும்
மேலும் போபால் விஷ வாயு விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் இழப்பீடாக ரூபாய் 7500 கோடி வழங்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment