மின்சார கட்டணத்தை உயர்த்த தமிழ்நாடு அரசு மின்சார வாரியம் ஒழுங்குமுறை ஆணணயத்திடம் முறையிட்டது. 2004-ம் ஆண்டுக்கு பிறகு மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை. கடந்த தி.மு.க. ஆட்சியில் குறிப்பிட்ட சில பிரிவுகளுக்கு மட்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.
மின்சார கட்டணத்தை உயர்த்தாததால் மின்வாரியம் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருவதாக ஆணையத்திடம் எடுத்து கூறியது. அதனால் எந்தெந்த பிரிவினருக்கு எவ்வளவு கட்டணம் உயர்த்தலாம் என முடிவு செய்து மின்சார வாரியம் ஒழுங்குமுறை ஆணையத்திடம் கடந்த நவம்பர் சமர்ப்பித்தது.
அதைத்தொடர்ந்து ஆணையம் பொதுமக்களிடம் கருத்து கேட்டது. சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களில் மின்கட்டணம் உயர்த்தப்படுவது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்டனர். இதையடுத்து மின்சார கட்டணத்தை எவ்வளவு உயர்த்தலாம், வீடுகள், தொழிற்சாலைகள், உயர் அழுத்த மின்சார பயன்பாடு, கட்டணம் எவ்வளவு அதிகரிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
சிறு தொழில்கள், குடிசை தொழில்களுக்கு கட்டண உயர்வு எப்படி அமல்படுத்துவது குறித்து இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று மாலை மின் கட்டண உயர்வுக்கான அறிவிப்பை வெளியிட மின்சார வாரிய ஒழுங்குமுறை ஆணையம் முடிவு செய்துள்ளது.
இன்று அறிவிக்கப்படும் மின்கட்டண உயர்வு ஏப்ரல் 1-ந்தேதியில் இருந்து அமுலுக்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment