கூடங்குளம் அணு மின் நிலையத்தை எதிர்த்து போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தலைமையில் பல மாதங்களாக போராட்டம நடந்தது. இதனால் அணுமின் நிலைய செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டது. அணு மின் நிலையத்தால் கூடங்குளம் சுற்று வட்டாரப் பகுதியில் பாதிப்பு ஏற்படும் என்று போராட்டக் குழுவினர் கூறி வந்தனர்.
ஆனால் மத்திய- மாநில அரசுகள் குழு கூடங்குளம் அணு மின் நிலையத்தால் பாதிப்பு இல்லை என்று கூறினர். அதை போராட்டக் குழுவினர் ஏற்க மறுத்துவிட்டனர். இந்த நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்தது. இதைக் கண்டித்து இடிந்தகரையில் உதயகுமார் தலைமையில் தொடர் உண்ணாபிரதம் இருந்தனர். திடீர் என்று நேற்று முன்தினம் உண்ணா விரதத்தை உதயகுமார் வாபஸ் பெற்றுக் கொண்டார்.
ஆனாலும் போராட்டம் தொடரும் என்று அறிவித்தார். இந்த நிலையில் நாகர்கோவிலில் உள்ள உதயகுமார் வீட்டில் மத்திய அரசு அதிகாரிகள் இன்று திடீர் சோதனை நடத்தி னார்கள். உதயகுமார் வீடு நாகர்கோவில் பறக்கை இசங்கன் விளையில் உள் ளது. இங்கு உதயகுமாரின் மனைவி மீரா கீழ்ப்புள்ளுவிளை என்ற இடத்தில் ஷாக்கர் மெட்ரிக்குலேசன் பள்ளிக் கூடம் நடத்தி வருகிறார்.
உதயகுமார் இன்று காலை வீட்டில் இல்லை. இடிந்த கரை சென்று இருந் தார். மீரா பள்ளிக்கு சென்று விட்டார். உதயகுமாரின் தந்தை பரமார்த்தலிங்கம், தாயார் பொன்னுமணி ஆகியோர் மட்டும் இருந்தனர். காலை 9 மணிக்கு 4 அதிகாரிகள் வந்தனர். அவர்களில் ஒருவர் உள்ளூர் கிராம அதிகாரி. மற்ற 3 பேர் மத்திய அரசின் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்கு முறைஆணைய அதிகாரிகள் ஆவார்.
அவர்கள் உதயகுமார் தந்தையிடம் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு அடையாள அட்டைகளையும் காண்பித்தனர். உங்கள் மகன் நடத்தும் பள்ளிக்கூடம் சம்பந்தமாக விசாரணை நடத்த வந்திருக் கிறோம். உதயகுமார், மீரா ஆகியோரை வரச்சொல்லுங்கள் என்று கூறினர். உடனே இடிந்தகரையில் இருக்கும் உதயகுமாருக்கும், பள்ளிக் கூடத்தில் இருந்த மீராவுக்கும் தகவல் தெரிவிக் கப்பட்டது. சில நிமிடங்களில் மீரா பள்ளிக்கூடத்தில் இருந்து வீட்டுக்கு வந்தார். அவ ரது அனுமதியுடன் 4 அதிகாரிகளும் வீட்டுக்குள் சென்று சோதனை நடத்தினார்கள்.
முதலில் வீட்டின் மாடியில் சென்று சோதனை நடத்தினார்கள். அதன் பிறகு கீழ்த்தளத்தில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது மீராவும் உடன் இருந்தார். அவர் அதிகாரிகளை ஒவ்வொரு இடமாக அழைத்துச் சென்று காண்பித்தார். தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது. கூடங்குளம் போராட் டத்தை முன் நின்று நடத்தும் சமூக சேவை அமைப்புகளுக்கு வெளி நாடுகளில் இருந்து பணம் வருவதாக புகார் கூறப்பட் டது. இதையடுத்து மத்திய அரசு அதிகாரிகள் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டத்தில் உள்ள சமூக சேவை அமைப்புகளின் வங்கி பணபரிவர்த்தனைகளை ஆய்வு செய்தனர். வரவு- செலவு கணக்குகளையும் சோதனை செய்தனர்.
மேலும் ஜெர்மன் நாட்டுக்காரர் ஹெர்மன் நாகர்கோவில் பகுதியில் பல மாதங்கள் ரகசியமாக தங்கி இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. அவர் உதயகுமாரை சந்தித்து இருப்பதும் அதி காரிகள் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து ஜெர்மன் நாட்டுக்காரர் சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பப்பட்டார். மத்திய அரசு அதிகாரிகள் இது தொடர்பாக உதயகுமாரி டம் விசாரணை நடத்த திட்டமிட்டு இருந்தனர்.
அதன் ஒரு பகுதியாக இன்று நாகர்கோவில் வீட்டில் சோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது. அதிகாரிகள் சோதனை பற்றி உதயகுமாரின் தந்தை பரமார்த்தலிங்கம் கூறியதாவது:-
இன்று காலை வீட்டில் மகனும், மருமகளும் (உதயகுமார், மீரா) இல்லாத போது 4 அதிகாரிகள் சோதனை நடத்த வந்தனர். நான் அவர்களுக்கு தகவல் கொடுத்ததும் மீரா வந்து அதிகாரிகளை வீட்டுக்குள் அழைத்துச் சென்றார். அதிகாரிகள் பள்ளிக் கூடம் சம்பந்தமாக சோதனைக்கு வந்திருப்பதாக சொன்னார்கள். அப்படியானால் பள்ளிக்கு சென்று சோதனை போட வேண்டியது தானே, வீட்டில் ஏன் சோதனை போடுகிறார்கள் என்று தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment