இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரின்போது பல்லாயிரக்கணக்கான அப்பாவி ஈழ தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். உயிர் தப்பிய தமிழர்களின் வாழ்வாதாரங்கள் அழிக்கப்பட்டன. பெண்கள் பாலியல் சித்ரவதை செய்து ஈவு இரக்கமின்றி கொல்லப்பட்டனர்.
இலங்கையில் நடந்த இந்த கொடூர செயல்களுக்கான ஆதாரங்கள் தற்போது ஒவ்வொன்றாக வெளியாகி வருகின்றன. மனதை பதறவைக்கும் இந்த காட்சிகளை கண்டு உலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. இலங்கைக்கு எதிராக ஐ.நா.மனித உரிமை பேரவையில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. அந்த தீர்மானம் மீது தற்போது விவாதம் நடந்து வருகிறது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் உறுப்பினர்களாக 47 நாடுகள் உள்ளன. தீர்மானம் வெற்றி பெற 24 நாடுகளின் ஆதரவு தேவை.
இன்று நடைபெற்ற வாக்கெடுப்பில் இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா உள்ளிட்ட 24 நாடுகள் வாக்களித்தன. 15 நாடுகள் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தன. 8 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்து நடுநிலைமை வகித்தன.
இதன்மூலம் அமெரிக்கா கொண்டு வந்த இலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து ஈழத் தமிழர்களின் வாழ்வில் விடிவு பிறக்கும் என சர்வதேச மக்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
தீர்மானம் வெற்றி பெற்றாலும் கூட நான் முன்னர் கூறிய படி இந்தியா தீர்மானத்தில் இலங்கைக்கு ஆதரவாக திருத்தம் கொண்டு வந்து இந்தியா ஆதரித்தது. இன் நிலையில் தீர்மானம் இலங்கைக்கு சாதகமாகவே உள்ளது.இருப்பினும் தர்மம் ஜெயிக்கும் என்று காத்திருப்போம்.
ReplyDelete