திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்தியா முழுவதற்கும் ஒரே கல்விக் கொள்கை, ஒரே நுழைவுத் தேர்வு என்பது போன்ற கூட்டாட்சித் தத்துவத்திற்கே உலை வைக்கும் திட்டத்தை மத்திய மனித வள அமைச்சகம் செய்வது தவறான நிலைப்பாடாகும். மறைமுகமாக மாநிலப் பட்டியலை மத்தியப் பட்டியலுக்குக் கொண்டுவரும் மகாசூழ்ச்சியாகும்.
நுழைவுத் தேர்வை ரத்து செய்ததன் மூலமாகத்தான் தமிழ்நாட்டில் பெற்றோர்கள் நிம்மதி அடைந்தனர். கிராமப்புற மாணவர்களுக்கும், ஏழை, எளிய மாணவர்களுக்கும் ஏராளமான வாய்ப்புகள் கிடைத்தன. மீண்டும் இந்த ஏற்பாட்டின்மூலம் ஒருவகை பன்முக கலாசாரம், மொழி, கிராமப்புற மாணவர்களின் முன்னேற்றம் இவைகளுக்கு ஆப்பு அடிக்கப்படுகிறது.
இதனை முழு மூச்சாக எதிர்த்து தடுத்து நிறுத்தவேண்டியது கட்சி வேறுபாடுகளைத் தாண்டிய முக்கிய கடமையாகும். முதல்-அமைச்சரும் இந்த நுழைவுத் தேர்வு ஏற்பாட்டை எதிர்த்துள்ளார். எனினும், இப்போதும் எதிர்ப்பை பதிவு செய்யவேண்டும்.
இதைக் கண்டித்து வருகிற 12-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று மாவட்டத் தலைநகரங்களில் திராவிடர் மாணவர்கள், இளைஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள்.
இவ்வாறு கி.வீரமணி கூறியுள்ளார்
No comments:
Post a Comment