ஜனாதிபதி தேர்தல் விவகாரத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரான மம்தா பானர்ஜி சரியான நேரத்தில் சரியான முடிவை எடுப்பார் என அக்கட்சி கூறியுள்ளது. 'ஜனாதிபதி வேட்பாளர் விஷயத்தில் திரிணாமூல் கட்சி இறுதி முடிவை இதுவரை எடுக்கவில்லை. இது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் உன்னிப்பாக கவனித்து வரும் மம்தா, சரியான நேரத்தில் சரியான முடிவை எடுப்பார்’ என அக்கட்சியின் செய்தி தொடர்பாளரும், எம்.பி.யுமான குணால் கோஷ் கூறியுள்ளார்.
'சங்மாவுக்கு திரிணாமூல் காங்கிரஸ் ஆதரவளிக்குமா அல்லது உங்களால் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அப்துல்கலாம் தேர்தலில் போட்டியிடாததால் உங்கள் கட்சி தேர்தலை புறக்கணிக்குமா?’ என பத்திரிகையாளர்கள் குணாலிடம் கேட்டனர்.
இக்கேள்விக்கு பதிலளித்த குணால், ‘திரிணாமூல் காங்கிரசின் பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், இவ்விவகாரத்தில் முடிவெடுக்கும் உரிமையை கட்சித் தலைவரான மம்தாவுக்கு அளித்துள்ளனர்’ எனக் கூறினார்.
இந்நிலையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரான பிரணாப் முகர்ஜிக்கு எதிராகப் போட்டியிடும் முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மாவை ஆதரிப்பதாக பாரதீய ஜனதா இன்று அறிவித்துள்ளது. ஏற்கனவே பிரணாப்புக்கு ஆதரவளிக்க மறுத்துவிட்ட திரிணாமூல் காங்கிரஸ், சங்மாவை ஆதரிக்குமா அல்லது தேர்தலை புறக்கணிக்குமா என்ற எதிர்பார்ப்பு தற்போது அரசியல் வட்டாரத்தில் நிலவுகிறது.

No comments:
Post a Comment