காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்ட பிரணாப் முகர்ஜிக்கு, பல்வேறு அரசியல் கட்சிகளிடமும் ஆதரவு சேகரிக்கும் முயற்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஈடுபட்டுள்ள நிலையில், பிரணாப் மீது கூறப்படும் பல்வேறு ஊழல் புகார்களை, குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு முன்பாகவே விசாரித்து முடிக்க வேண்டும் என அன்னா ஹசாரே குழு வலியுறுத்தியுள்ளது.
ஜனாதிபதி வேட்பாளராக பிரணாப் அறிவிக்கப்பட்ட உடனேயே, அவர் குற்றமற்றவர் என நிரூபித்த பின்னர் தான் பதவியேற்க வேண்டும் என அன்னா குழு அறிவித்திருந்தது. அப்போது அன்னா குழுவுக்கு, பிரணாப் முகர்ஜி அலுவலகத்திலிருந்து ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. அதில், 'அவர் மீது குற்றம் சாட்டுவது அரசியல் நெறிமுறைக்கு அப்பாற்பட்டது. மேலும் சுயநல நோக்கம் கொண்ட இந்த குற்றச்சாட்டுக்கள் பொறுப்பின்மையை பிரதிபலிக்கிறது’ எனக் கூறப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக பிரணாப் முகர்ஜிக்கு, அன்னா குழுவினர் அனுப்பியுள்ள கடிதத்தில் தங்களது கோரிக்கையை நியாயப்படுத்தி இருந்ததோடு பிரணாப் மீதான புகார்களை விசாரித்தே ஆக வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் இக்கடிதத்தில் அன்னா ஹசாரேயின் கையெழுத்து இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மாறாக, அன்னா குழு உறுப்பினர்களான ஷாந்தி பூஷன், அரவிந்த் கெஜ்ரிவால், பிரஷாந்த் பூஷன், கிரண் பெடி, குமார் பிஸ்வாஸ், மனீஷ் சிசோதியா மற்றும் சந்திரமோகன் உள்ளிட்டோரின் கையெழுத்துக்கள் இடம்பெற்றிருந்தன.

No comments:
Post a Comment