கோயம்புத்தூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த இலங்கை விவசாயத்துறை அமைச்சர் ரெஜினால்டு கூரேக்கு தமிழ் அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால் அவர் கோயம்புத்தூரை விட்டு வெளியேற வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
இலங்கை அமைச்சர் ரெஜினால்டு கோவையில் முகாமிட்டிருப்பது தெரியவந்ததும் மதிமுக, பெரியார் தி.க., விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் அவர் தங்கியிருந்த ஹோட்டல் முன்பாக கறுப்புக் கொடிகளுடன் கூடி போராட்டம் நடத்தினர். அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து அவர் கோயம்புத்தூர் நகரைவிட்டு வெளியேற வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
ஏற்கெனவே இலங்கை அமைச்சர்கள் தமிழகம் வரும்போது முன்கூட்டியே சொல்லிவிட்டுத்தான் வரவேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்குக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment