2ஜி வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட முன்னாள் தகவல் தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா கடந்த 15-ந் தேதி நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அதன்பின்னர் 8-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை ஆ.ராசா தமிழ்நாட்டுக்கு வந்து செல்ல டெல்லி சி.பி.ஐ சிறப்பு கோர்ட் நீதிபதி அனுமதி வழங்கினார்.
இதையடுத்து இன்று மாலை ஆ.ராசா சென்னை வந்தடைந்தார். சென்னை வந்த ஆ.ராசாவுக்கு, விமான நிலையத்தில் தி.மு.க தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்தில் இருந்து அண்ணா அறிவாலயம் வந்த ஆ.ராசா, அங்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி மற்றும் நிர்வாகிகளை சந்தித்தார்.
ராசாவுடனான சந்திப்புக்குப் பின்னர் பேசிய கருணாநிதி, 'ஒரு வருட இடைவெளிக்குப் பின்னர் அண்ணன் தனது தம்பியை சந்திப்பது போன்றது இந்த சந்திப்பு’ என்றார். ராசா தற்போது அரசியலில் இருப்பதாகவும், அவர் பொதுக்கூட்டங்களில் பேசுவார் எனவும் கருணாநிதி மேலும் கூறியுள்ளார்.
கருணாநிதியுடனான சந்திப்பு குறித்து ராசா கூறும்போது, 'தலைவரின் கைகளில் எப்போதும் நான் ஒரு குழந்தையாக இருப்பேன்’ என்றார்.
No comments:
Post a Comment