மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நித்யானந்தா நியமிக்கப்பட்டதில் இருந்து பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
ஆனாலும் மதுரை ஆதீனம் அருணகிரி நாதர், நித்யானந்தா ஆகியோர் தினந்தோறும் பூஜைகள் செய்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மதுரை ஆதீன மடத்துக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் மதுரை ஆதீன மடத்துக்கு இன்று ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்தில் வருகிற 27-ந் தேதி (புதன்கிழமை) மதுரை ஆதீன மடத்தை வெடிகுண்டு வைத்து தகர்ப்போம். இப்படிக்கு பரிசுத்தராஜா, மதுரை ஆதீனம் மீட்பு குழு துணைத்தலைவர், சுப்பிரமணியபுரம், மதுரை என்று எழுதப்பட்டு இருந்தது. செல்போன் எண்ணும் குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும் அந்த கடிதம் மதுரை அண்ணாநகர் பஸ் நிலையம் பகுதியிலிருந்து அனுப்பப்பட்டு உள்ளது.
இதையடுத்து மதுரை ஆதீனத்தின் சார்பில் மடத்தின் நிர்வாகிகள் இந்த வெடிகுண்டு மிரட்டல் குறித்து விளக்குத்தூண் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து மதுரை ஆதீனம் கூறியதாவது:-
இந்த மிரட்டலுக்கெல்லாம் நான் பயப்படமாட்டேன். எந்த அச்சுறுத்தலுக்கும் பணியமாட்டேன். நித்யானந்தாவை இளைய ஆதீனமாக நியமித்ததில் எந்த மாற்றமும் இல்லை. வெடிகுண்டு மிரட்டல் கடிதம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. மிரட்டல் விடுத்த நபர் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மதுரை ஆதீன மடத்துக்கு போலீசார் உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்றார்.
ஆதீன மடத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:
Post a Comment