இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக் ஷே, தமது வெற்றியை தடுக்க, சதி திட்டம் தீட்டியதாக, புதிய அதிபர் மைத்ரிபாலா சிறிசேன, பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
ஏற்கனவே, வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரா கடந்த வாரம் இதே குற்றச்சாட்டு தொடர்பாக அளித்த புகாரின் படி, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில், இதே குற்றச்சாட்டை சிறிசேனவும் கூறியுள்ளதால், ராஜபக் ஷேவுக்கு எதிரான புகார் வலுவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கையின் வடக்கு மத்திய மாகாணத்தில், தன் சொந்த தொகுதியான பொலொனருவாவில் பொதுக்கூட்டத்தில் சிறிசேன மேலும் பேசியதாவது: அதிபர் தேர்தல் ஓட்டு எண்ணிக்கையின் போது, தனக்கு சாதகமற்ற நிலை உருவாவதை கண்ட ராஜபக் ஷே, முடிவை வெளியிடாமல் வைத்திருந்து, மீதமுள்ள இரண்டு ஆண்டுகள் ஆட்சியில் நீடிக்க திட்டமிட்டார்.
ஊடகங்களில், தனிப்பட்ட முறையில் என்னை சாடினார். எனக்கு நேர்ந்த நெருக்கடி போல், வேறு எந்த அதிபர் வேட்பாளருக்கும் ஏற்பட்டிருக்காது. இலங்கையில், கடுமையான அரசியல் மற்றும் அது தொடர்பான வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, நாகரிகமான, புதிய அரசியல் கலாசாரம் உருவாக்கப்படும்.
அதற்கு, முதற்கட்டமாக, அனைத்து கட்சியினரும், வேற்றுமையை மறந்து, புதிய அரசின், 100 நாள் திட்டத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும். இத்திட்டத்தை, இலங்கை சுதந்திரா கட்சியின் தலைமை பதவியை நான் ஏற்க மறுத்திருந்தால் செயல்படுத்த முடியாது.
பார்லி.,யில் அக்கட்சி பெரும்பான்மை பலத்துடன் உள்ளது. அதிபர் தேர்தலில், எதிர்க்கட்சிகள் என்னை, பொது வேட்பாளராக நிற்க வைத்தன. அதில் உள்ள மிகப் பெரிய இடர்ப்பாட்டை உணர்ந்தே, துணிவுடன் அப்பொறுப்பை ஏற்றுக் கொண்டேன். ஒருவேளை நான் தோல்வி அடைந்திருந்தால், ராஜபக் ஷே என்னை கைது செய்து சிறையில் அடைத்துஇருப்பார். என் மகன், மருமகள் ஆகியோரும் சிறையில் அடைக்கப்பட்டு இருப்பர். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment