Wednesday, January 28, 2015

அனுஷ்காவின் ‘பாகுபாலி’ படத்தின் 30 நிமிட காட்சிகள் ஆன் லைனில் கசிவு

மகாதீரா, சத்ரபதி நான் ஈ ஆகிய படங்களை இயக்கிய பிரபல தெலுங்கு இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி பாகுபாலி என்ற பிரமாண்ட சரித்திர படம் எடுத்து வருகிறார்.  பிரபாஸ் கதாநாயகனாகவும் அனுஷ்கா ஷெட்டி கதாநாயகியாகவும்  நடிக்க, ராணா, அனுஷ்கா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் 'பாகுபாலி'. தெலுங்கில் 'பாகுபாலி', தமிழில் 'மகாபலி' என்ற பெயரில் என இரண்டு மொழிகளிலும் இப்படம் தயாராகி வருகிறது. பிரபாஸுக்கு அம்மாவாக ஸ்ரீதேவி நடிக்கிறார். தளபதி கேரக்டரில் சத்யராஜ், வில்லனாக ராணா, நடிக்கிறார்.

இயக்குனர் ராஜமௌலியின் தந்தை கே.வி. விஜயேந்திர பிரசாத் ஒரு இயக்குனர் என்பது அறிந்த ஒன்று. அவர் எழுதி வைத்திருந்த கதையை ஆவலுடன் எடுக்க இருந்தாராம். ஆனால் முடியவில்லை. அது ஒரு நாட்டுக்காக இரண்டு உறவினர்கள் மோதிக் கொள்கிற கதையாம்.

ஜைன மதத்தை ஸ்தாபித்தவர் என்று நம்பப்படும் ரிஷப மாமுனிவரின் முதல் மகன் பரதன், இரண்டாவது மகன் பாகுபலி. பரதனுக்கு முடிசூட்டு விழா நடக்க, பாகுபலி வெகுண்டெழுந்து சகோதரன் பரதனோடு போரிட்டு வெற்றி வாகை சூடுகிறான். போரில் தோற்ற அண்ணனின் முகம் வாடியதைக் கண்டு, பாகுபலி துறவறம் மேற்கொண்டதாகப் புராணங்கள் கூறுகின்றன. கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் நிகழ்ந்ததாக நம்பப்படும் இந்தப் போரையும் பாகுபலியின் காதலையும் பின்னணியாக  கொண்டு இப்படம் தயாராகிறது.

அதுவும் வெறும் போராக மட்டுமல்லாமல் உறவு ரீதியாக சென்டிமென்ட்டால் தாக்கிக்கொள்ளும் கதை. அந்த கதையின் மைய கருவை மட்டும் எடுத்துக் கொண்டு பல வருடங்களாக அதை டெவலப் செய்துதான் ‘பாகுபாலி’யின் கதையை உருவாகியுள்ளார் இயக்குனர் ராஜமவுலி.

ஹாலிவுட் வரலாற்றுப் படங்களுக்குச் செய்யப்படுவதுபோலவே புரொடெக்‌ஷன் டிசைன் செய்து பிரம்மாண்ட நகரம் ஒன்றை உருவாக்கிப் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள். இதில் 9-ம் நூற்றாண்டின் ஆடைகள், போர்த் தளவாடங்கள், யானைகள், குதிரைகளுக்கான போர்க் கவசங்கள், அந்தக் காலகட்டத்தின் ஆயுதங்கள் என்று படத்தின் முன் தயாரிப்புக்கு மட்டுமே ஓராண்டு காலம் கடுமையாக உழைத்திருக்கிறதாம் ராஜமவுலியின் டீம்.  

இப்படத்திற்கு இசையமைத்துவரும் எம்.எம்.கீரவாணி, இதன்பிறகு இசையமைப்பதிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்திருக்கிறார். ‘டென் காமாண்ட்மென்ஸ்’ படத்தை விஞ்சும் விதமாகப் பாகுபலிக்குப் பின்னணி இசை அமைக்கப் பாடுபட்டுவருகிறாராம் இவர்.

இந்த படம் 2 பார்ட்டாக தயாரிக்கபடுகிறது முதல் பார்ட் 2015 வெளியாகிறது. 2 வது பார்ட் 2016 ஆம் ஆண்டு வெளியாகிறது.

ஏப்ரல் மாதம் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இப்படத்தின் டப்பிங், ரீ ரிக்கார்டிங், மிக்சிங், கிராபிக்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகள் வேக வேகமாக நடந்து வருகின்றன.

இந்த நிலையில் படத்தின் 30 நிமிட காட்சிகள் இன்டர்நெட்டில் வெளியாகி இருக்கிறது. தொழில்நுட்ப பணிகளில் ஈடுபட்ட ஒருவர்தான் இதை திருட்டுதனமாக காப்பி எடுத்து இன்டர்நெட்டில் வெளியிட்டிருக்க வேண்டும் என்று சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


No comments:

Post a Comment