சினிமா நடிகர் சந்தானம் நேற்று தனது 35–வது பிறந்த நாளை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அனைத்து சன்னதிகளிலும் தரிசனம் செய்த அவர் நவக்கிரக சன்னதியில் நெய்தீபம் ஏற்றி வழிபட்டார்.
பின்னர் மலையை சுற்றி கிரி வலம் புறப்பட்டார். ஆட்டோவில் கிரிவலம் சென்ற அவர் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்களிலும் இறங்கி தரிசனம் செய்தார். அப்போது முதியவர்களுக்கு அன்னதானம், போர்வை வழங்கினார்.
நடிகர் சந்தானத்தை பொதுமக்கள் திரண்டு வந்து பார்த்தனர். பள்ளி மாணவர்கள் அவரிடம் ஆட்டோகிராப் வாங்கினர். நடிகர் சந்தானம் கூறியதாவது:–
எனது பிறந்த நாளை முன்னிட்டு கோவிலுக்கு வந்தேன். இதுவரை 200 படங்கள் நடித்துள்ளேன். தற்போது 5 படங்களில் நடித்து வருகிறேன். அதில் ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்கிறேன். எனது ரசிகர்கள் எப்போதும் மகிழ்ச்சியுடன் சிரித்து கொண்டே இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment