ஈரோடு மாவட்டம் பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்று காலை 9ம் வகுப்பு மாணவர்கள் 6 பேர் பள்ளி க்கு வந்ததும் வகுப்புக்கு செல்லாமல், விளையாட்டு மைதானத்தில் கழிப்பறைக்கு அருகே சென்று ஒளிந்து கொண்டனர். பின்னர் அங்கிருந்து 2 பேர் மட்டும் வெளியேறி அருகில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைக்குச் சென்றுள்ளனர். மது வாங்கி வந்து மைதானத்தில் அமர்ந்து குடித்துள்ளனர்.
மாணவர்களின் இந்த விபரீத செயலை, அங்கு தற்செயலாக வந்த மேல்நிலை வகுப்பு மாணவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்களை எச்சரித்துள்ளனர். ஆனால் அவர்களோ பாட்டிலை உடைத்து சீனியர் மாணவர்களை மிரட்டி உள்ளனர்.
இதுகுறித்து ஆசிரியர்களுக்குத் தகவல் தெரிவித்தனர். ஆசிரியர்கள் மைதானத்திற்கு வருவதற்குள் போதை மாணவர்கள் புத்தகப் பைகளுடன் ஓட்டம் பிடித்துள்ளனர். ஆனால், ஒரு மாணவன் மட்டும் போதையில் மயங்கி விழுந்தான். அவனை தூக்கிச்சென்ற ஆசிரியர்கள், மாணவரின் பெற்றோருக்கு தகவல் தந்தனர்.
பள்ளிக்கு பதற்றத்துடன் வந்த பெற்றோர் மகனை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். பள்ளியில் மாணவர்கள் மது அருந்திய சம்பவம், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியது: இதுபோன்ற சம்பவங்கள் பலமுறை நடந்துள்ளது. பள்ளிக்கு வந்து விட்டு, வகுப்பறைக்கு வராமல் மதுக்கடைக்கு மாணவர்கள் செல்கின்றனர். பள்ளி சுற்றுச் சுவரின் ஒரு பகுதி உடைந்துள்ளது. இதன் வழியாக மாணவர்கள் வெளியே சென்று மது குடிக்கின்றனர் என்றனர்.

No comments:
Post a Comment