மூன்று நாள் பயணமாக இந்தியா வந்த அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று சவுதி அரேபியா கிளம்பினார். குடியரசு தின விழா அணிவகுப்பை கண்டுகளித்த அவர், மோடியுடன் கூட்டாக ரேடியோவில் பேசினார்.
அந்த நிகழ்ச்சி நாடு முழுவதும் நேற்று இரவு 8 மணிக்கு ஒலிபரப்பட்டது. இதில் பல ருசிகர விஷயங்களை இரு தலைவர்களும் வெளியிட்டனர். ‘மன் கீ பாத்’ என்ற பெயரில் கடந்த அக்டோபர் மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் ரேடியோவில் நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.
இந்த மாதம் இந்த நிகழ்ச்சியில் தன்னுடன் அமெரிக்க அதிபர் ஒபாமாவும் கலந்து கொள்வதாக மோடி தெரிவித்திருந்தார். இதற்கான ஒலிப்பதிவு நேற்று முன்தினம் நடைபெற்றது. நேற்று அந்த நிகழ்ச்சி ரேடியோவில் ஒலிபரப்பப்பட்டது.
மோடி, ஒபாமா இருவருக்கும் நேயர்களிடம் இருந்து கேள்விகள் வந்தன. கேள்விகளை மோடியே படித்தார்; அதற்கு அவரும் ஒபாமாவும் ருசிகரமாக பதில் அளித்தனர். அதன் முக்கிய அம்சங்கள்: வெள்ளை மாளிகை முன் நீங்கள் இளைய வயதில் போட்டோ எடுத்து கொண்டது சில மாதம் முன் வெளியாகி இருந்தது.
அப்போது, நீங்கள் வெள்ளை மாளிகையில் நுழைவீர்கள் என்று கனவு கண்டதுண்டா?
மோடி: அமெரிக்காவுக்கு நண்பர்களுடன் சென்றபோது சந்தோஷத்துக்காக போட்டோ எடுத்து கொண்டேன். அப்போது வெள்ளை மாளிகையை பார்த்து வியந்துள்ளேன். ஆனால், ஒரு நாள் சிறப்பு விருந்தினராக அந்த மாளிகைக்குள் நுழைவேன் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை.
வெள்ளை மாளிகைக்கு இளைய வயதில் போயிருக்கிறீர்களா? சுற்றி பார்த்ததுண்டா?
ஒபாமா: இளம் வயதில் வெள்ளை மாளிகைக்கு சென்று பார்த்துள்ளேன். அப்போதெல்லாம், நானும் ஒரு நாள் இந்த மாளிகைக்குள் நுழைவேன், தங்குவேன் என்றெல்லாம் நினைத்து கூட பார்த்ததில்லை.
இந்தியாவின் பிரதமராக வருவீர்கள் என்று நீங்கள் எப்போதாவது எண்ணியதுண்டா?
மோடி: நான் பிரதமர் நாற்காலியில் உட்காருவேன் என்று நினைத்ததே இல்லை. அப்படி ஒரு நினைப்பு வந்தததே இல்லை. நான் ஒவ்வொரு முறையும் சொல்வதுண்டு; யார் மாதிரியும் வர வேண்டும் என்று கனவு காணக்கூடாது என்று. ஆனால், ஏதாவது இந்த நாட்டுக்கு செய்ய வேண்டும் என்று கனவு கண்டதுண்டு.
குழந்தையாக இருந்தபோது எந்த புத்தகம் உங்களை மிகவும் ஈர்த்தது?
மோடி: பெஞ்சமின் பிராங்க்ளின் பற்றியது தான். அவர் வாழ்க்கை சரிதத்தை படித்து வியந்துள்ளேன்; அவர் வாழ்க்கை தான் என்னை மிகவும் ஈர்த்தது.
உங்கள் குழந்தைகள் பற்றி சொல்லுங்களேன். அவர்கள் இந்தியா பற்றி என்ன நினைக்கின்றனர்?
ஒபாமா: இந்தியாவின் வரலாறு பற்றியும், அற்புதமான கலாச்சாரம் பற்றியும் அவர்கள் படித்து வியந்து என்னிடம் பல கேள்விகள் கேட்டுள்ளனர். நான் திரும்பியுடன் அவர்களிடம் நான் பார்த்து வியந்ததை எல்லாம் சொல்லுவேன்.
இந்தியாவிடம் பெருமைப்படத்தக்க விஷயம் சொல்லுங்களேன்?
ஒபாமா: மற்ற நாடுகளிடம் இல்லாத பல அரிய விஷயங்கள் இந்தியாவிடம் உள்ளன. பல முன்னேற்றங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக பொது சுகாதாரம் குறித்த விஷயங்களை சொல்லலாம். மற்ற நாடுகளுக்கு இந்தியாவிடம் இதுபோன்ற கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் பல உள்ளன.
மோசமான நாள் எது; அப்படிப்பட்ட நாளில் உங்கள் மகிழ்ச்சியை திரும்ப கொண்டு வருவது எது?
ஒபாமா: இப்படி பல நாட்களில் சந்தித்துள்ளேன். முக்கிய முடிவு எடுக்க வேண்டிய நாளாக இருக்கும். சில சமயம் வேதனை தரும் நாளாக இருக்கும். அப்போது மனது மிகவும் தவிக்கும்; கவலையில் மூழ்குவேன். ஆனால், அப்படிப்பட்ட சூழ்நிலையில், நான் பார்க்கும் பலரில் யாராவது ஒருவர் மூலம் எனக்கு மகிழ்ச்சி திரும்பும். புதிய உற்சாகத்தை உணர்வேன். அப்படிப்பட்ட சூழ்நிலைகள் பல முறை நேர்ந்துள்ளன.
இந்தியாவுடன் எந்த வகையில் கைகோர்ப்பீர்கள்?
ஒபாமா: கட்டமைப்பு துறைகளில் இந்தியாவுக்கு அமெரிக்கா கைகொடுக்கும். அதுபோல, மின்சார பிரச்னையில் இருந்து மீள வழி காண்போம்.
வறுமையை ஒழிக்க இந்தியா உறுதி பூண்டுள்ளது. அது பற்றி?
ஒபாமா: நாங்களும் இந்தியாவுடன் சேர்ந்து பல கோடி மக்களின் வறுமையை அறவே ஒழிக்க பாடுபடுவோம். இவ்வாறு இரு தலைவர்களும் பதில் அளித்தனர்.
அளித்த பதில்கள்

No comments:
Post a Comment