டெல்லியில் சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தேர்தல் கமிஷனும் தனது கண்காணிப்பை தீவிரபடுத்தியுள்ளது.
இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளரான நரேஷ் பல்யானின் வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வந்த புகாரை தொடர்ந்து தேர்தல் பறக்கும் படையினர் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். இதில் அவரது வீட்டில் இருந்து 5000-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆம் ஆத்மி கட்சி சார்பில் உத்தம் நகர் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள நரேஷ் பல்யான் கடந்த ஆண்டு பா.ஜ.க.விலிருந்து விலகி இக்கட்சியில் சேர்ந்தார்.
தெற்கு டெல்லி நகரமன்ற கவுன்சிலராகவும் நரேஷ் பல்யான் பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment