நடிகரும், திமுக தலைவர் கருணாநிதியின் பேரனுமான அருள்நிதிக்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி வீட்டில் அவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
திமுக தலைவர் கருணாநிதியின் மகன் தமிழரசுவின் மகன் நடிகர் அருள்நிதி. வம்சம், மௌனகுரு, தகராறு உள்ளிட்ட படங்களில் நடித்த, இவர் தற்போது நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், அருள்நிதிக்கு திருமணம் ஏற்பாடு செய்ய அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர். அதன்படி, சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியின் மகள் மணமகளாக தேர்வு செய்யப்பட்டார்.
இவர்களது திருமண நிச்சயதார்த்தம் நேற்று நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், தயாளு அம்மாள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத நிலையில் இருப்பதால் கோபாலபுரம் இல்லத்திலேயே இந்த நிச்சயத்தார்த்தத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, நேற்று மாலை 5 மணிக்கு அருள்நிதியின் திருமண நிச்சயதார்த்த விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், கருணாநிதி, தயாளு அம்மாள், ராஜாத்திஅம்மாள், தமிழரசு, துர்க்கா ஸ்டாலின், காந்தி அழகிரி, கனிமொழி என கருணாநிதி குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
மு.க.ஸ்டாலின் வெளியூரில் இருப்பதால் இந்நிகழ்வில் பங்கேற்கவில்லை. அதேபோல், மு.க.அழகிரியும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.

No comments:
Post a Comment