'சங்கமம்' படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை விந்தியா. தொடர்ந்து 'சார்லி சாப்ளின்', 'நம்ம வீட்டு கல்யாணம்', 'கண்ணம்மா' உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். 2008–ல் அவருக்கு திருமணம் நடந்தது. பிறகு விவாகரத்து செய்து பிரிந்தார்.
பின்னர் அ.தி.மு.க.வில் இணைந்து நட்சத்திர பேச்சாளரானார். 2011 சட்டமன்ற தேர்தலில் அக்கட்சிக்காக பிரசாரம் செய்தார். சில தினங்களுக்கு முன் வாரணாசி சென்று இருந்தார். அங்கிருந்து திரும்பிய பிறகு அவருக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து நான்கு நாட்களாக தினமும் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். நேற்று மாலை அவரது உடல் நிலை திடீரென மோசம் அடைந்து, மயங்கி விழுந்தார்.
உடனடியாக அவரை கே.கே.நகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவரது கணையம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. மூன்று நாட்கள் ஆஸ்பத்திரியிலேயே தங்கி சிகிச்சை பெறுமாறு டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

No comments:
Post a Comment