நாடு முழுவதும் குறிப்பிட்ட அளவுக்கு மேல் வருவாய் உள்ள 1 கோடி பேருக்கு சமையல் எரிவாயு மானியத்தை ரத்து செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய அரசின் மானிய சுமையை குறைப்பதற்காக நிதியமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் மானியம் பெறுவோருக்கு கட்டுபாடுகளை விதிக்க முடிவு செய்துள்ளது. அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய அரசின் பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என தெரிகிறது.
குறிப்பாக 30 சதவிகிதம் வருமான வரி செலுத்துவோருக்கு மானியத்தை ரத்து செய்ய திட்டமிட்டிருப்பதாகவும், 3 முதல் 4 உறுப்பினர்கள் வரை உள்ள ஒரு குடும்பம் மாதம் ரூ.5 ஆயிரம் வரை உணவுக்காக செலவு செய்தால் அவர்களுக்கு மானியம் வழங்க வேண்டுமா என்று பரிசீலிக்கப்படுவதாகவும் மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமையல் எரிவாயு மானியம் யாருக்கு எல்லாம் அவசிய தேவை, யாருக்கெல்லாம் தேவையில்லை என்பதை கண்டறிய பட்டியல் ஒன்று தயாரிக்கப்படுவதாகவும், இந்த விவகாரத்தில் மத்திய நிதியமைச்சகம் இறுதி முடிவு எடுக்கும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த நடவடிக்கையின் மூலம் மானியம் பெறுவோர் பட்டியலில் இருந்து சுமார் 1 கோடி பேர் நீக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.
இதன் மூலம் அரசின் மானியச்சுமை கணிசமாக குறையும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத்திய அரசு திட்டத்தால் உயர்தட்டு மக்கள் மட்டுமின்றி நடுத்தர வர்க்கத்தினருக்கும் மானியம் ரத்து செய்யப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

No comments:
Post a Comment