காதல் சர்ச்சைகளில் சிக்கி மீண்டிருக்கும் நயன்தாரா நடிப்பில் மட்டும் கவனம் செலுத்துகிறார். சமீபத்தில் இவரைப்பற்றி இணைய தளத்தில் ஒரு வீடியோ வெளியானது.
மது கடை ஒன்றில் நயன்தாரா சென்று பீர் வாங்குவதுபோல் அக்காட்சி எடுக்கப்பட்டிருந்தது. அதைப்பார்த்து இண்டஸ்ரியே பரபரப்பானது. ஆனால் இது நயன்தாரா நடிக்கும் படமொன்றிற்காக எடுக்கப்பட்ட காட்சி என்றும் யாரோ செல்போனில் அக்காட்சியை படம் எடுத்து இணைய தளத்தில் வெளியிட்டிருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
இது பற்றி நயன்தாரா கூறுகையில், Ôசம்பந்தப்பட்ட வீடியோவை நான் பார்க்கவில்லை. பரபரப்புக்காக யார் வேண்டுமானாலும் நெட்டில் எதையும் பதிவு செய்வார்கள்.
அதை பற்றியெல்லாம் பதில் சொல்லிக் கொண்டு இருக்க என்னால் முடியாது. எனக்கு எதிரான விஷயங்களை பற்றி நான் எப்போதுமே சிந்திப்பதில்லை' என¢றார். பட ஷூட்டிங்கிற்காக டாஸ்மாக் கடையில் நயன்தாரா பீர் வாங்குவது போல் காட்சி படமாக்கப் பட்டுள்ளது.
இது ஷூட்டிங் அல்ல நிஜம் என தகவல் பரவி இருப்பது படத்துக்கு பப்ளிசிட்டி என படகுழு கூறியதாம். அதனால் நயன்தாராவும் மழுப்பலாக பதில் கூறுவதாக சொல்லப் படுகிறது.
No comments:
Post a Comment