யோகாசன குரு பாபா ராம்தேவ் தனக்கு மத்திய அரசு வழங்குவதாக அறிவித்த பத்ம விபூஷன் விருதை ஏற்றுக் கொள்ள மறுத்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் வரும் 26-ம் தேதி நடைபெறவுள்ள குடியரசு தின விழாவில் அவருக்கு இந்த விருது வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்குக்கு இன்று அவர் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
துறவு நிலையை மேற்கொண்டு வரும் நான் இது போன்ற உயரிய விருதுகளையும், கவுரவங்களையும் ஏற்றுக் கொள்வது பொருத்தமாக இருக்காது என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ள பாபா ராம் தேவ், தனக்கு பரிந்துரைக்கப்பட்ட பத்ம விபூஷன் விருதினை தகுதியான வேறொரு நபருக்கு அளித்து விடுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்தியாவில் சராசரி குடிமக்களுக்கு வழங்கப்படும் நாட்டின் கவுரவம்மிக்க இரண்டாவது உயரிய விருது ‘பத்ம விபூஷன்’ என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment