Wednesday, January 28, 2015

லிங்காவால் அனுஷ்காவுக்கு வந்த சோதனை ?

‘நான் ஈ' பட இயக்குனர் ராஜமவுலி, பாஹுபலி (மகாபலி) படத்தை தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் இயக்கி வருகிறார். பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா, சத்யராஜ் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது.

 கடந்த ஒன்றரை வருடத்துக்கும் மேலாக இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதன் ஸ்கிரிப்ட் நீண்டுகொண்டே சென்றதால் பார்ட் 1, பார்ட் 2 என இரு பாகமாக பிரித்து இயக்க முற்பட்டார்.

 பார்ட் 1 பாகம் முடிவடையும் நிலையை எட்டி உள்ளது. இந்நிலையில் அனுஷ்கா பிரபல நடிகர் ஒருவருடன் நடித்து திரைக்கு வந்த ஒரு படம் ஹிட் ஆகாததால் பாஹுபலி பட 2ம் பாகம் திட்டத்தை ராஜ மவுலி கைவிட்டதாக கூறப்படுகிறது.ஆனால் இதை நிராகரித்திருக்கிறார் இயக்குனர்.

 அவர் கூறும்போது,‘பாஹுபாலி பாகம் ஒன்றின் படப்பிடிப்பில் 2 பாடல்கள் மட்டுமே பாக்கி உள்ள நிலையில் படத்தின் மற்ற படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்தன. படத்தின் இறுதிகட்ட பணிகள் வேகமாக நடக்கிறது‘ என குறிப்பிட்டுள்ளார். பார்ட் 1 பணி என்று அவர் குறிப்பிட்டத்தை இப்படத்தின் 2பாகம் வரவுள்ளதை சூசகமாக அவர் குறிப்பிட்டதாக அவரது தரப்பில் கூறப்படுகிறது.


No comments:

Post a Comment