இந்திய குடியரசு தினவிழாவில் பங்கேற்க நாளை புது டெல்லி வந்து சேரும் ஒபாமா வரும் 27-ம் தேதி உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மகாலை தனது மனைவியுடன் பார்வையிட திட்டமிட்டிருந்தார்.
அவரது வருகையை முன்னிட்டு தாஜ் மகால் அமைந்துள்ள ஆக்ரா பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்திய பாதுகாப்பு படையினர் மட்டுமின்றி அமெரிக்க ரகசியப் பிரிவு போலீசாரும் தாஜ் மகாலை சுற்றிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஒபாமாவின் சுற்றுப்பயண நிகழ்ச்சி நிரலில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவித்ததுபோல் வரும் 27-ம் தேதி தாஜ் மகாலை பார்வையிட அவர் செல்ல மாட்டார் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
27-ம் தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த சில தனிப்பட்ட நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துள்ள ஒபாமா, தாஜ் மகால் பயணத்தை ரத்து செய்துள்ளார். கடந்த வியாழக்கிழமை மரணம் அடைந்த சவுதி மன்னரின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக 27-ம் தேதி அவர் டெல்லியில் இருந்து புறப்பட்டு நேராக சவுதி அரேபியாவுக்கு செல்கிறார் என அமெரிக்க அதிகாரிகள் இந்திய அதிகாரிகளுக்கு அதிகாரபூர்வ தகவல் அளித்துள்ளனர்.
இதனையடுத்து, நேற்றிலிருந்து ஆக்ராவில் உள்ள பிரபல ஓட்டல்களில் தங்கியிருந்த சுமார் 100 அமெரிக்க ரகசிய பிரிவு போலீசார் டெல்லி திரும்பினர்.
இந்நிலையில், ஒபாமாவின் தாஜ் மகால் பயண திட்டம் ரத்தானதன் பின்னணியில் புதிய தகவல்கள் வெளியாக தொடங்கியுள்ளன.
ஒபாமாவின் பிரத்யேக காரான ‘பீஸ்ட்’ மற்றும் அவரது பாதுகாப்பு படையில் உள்ள சுமார் 50 வாகனங்களை தாஜ் மகால் வளாகத்துக்குள் அனுமதிக்க மறுக்கப்பட்டதால்தான் இந்த திடீர் ரத்து அறிவிப்பு வெளியானதாக கூறப்படுகிறது.
முந்தைய சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி, தாஜ் மகாலை மாசு மற்றும் வாகனப்புகையில் இருந்து பாதுகாக்க பார்வையாளர்கள் அனைவரும் மைய கட்டிடத்தின் நுழைவு வாயிலில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் முன்னதாகவே தங்களது சொந்த வாகனங்களை விட்டு இறங்கிவிட வேண்டும்.
அதன் பின்னர், பேட்டரியால் இயங்கும் இலகு ரக வாகனத்தில் பயணித்து தாஜ் மகாலின் முகப்பு வாயிலுக்கு வர வேண்டும் என்னும் நடைமுறை அங்கு பின்பற்றப்படுகிறது.
இந்த நடைமுறைக்கு மாறாக, ஒபாமாவின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் சிறப்பு அனுமதியின் பேரில் முகப்பு வாயில் வரை ஒபாமாவின் ‘பீஸ்ட்’ காரும் அவரது பாதுகாப்பு வாகனங்களும் வர உத்தரப்பிரதேச மாநில அரசிடம் ஒபாமாவின் பாதுகாப்பு அதிகாரிகள் கேட்டுக்கொண்டதாக தெரிகிறது.
சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை சுட்டிக்காட்டி இந்த வேண்டுகோளை ஏற்றுக்கொள்ள மறுத்த உ.பி. அதிகாரிகள், தேவை ஏற்பட்டால் சுப்ரீம் கோர்ட்டில் சிறப்பு அனுமதி பெற்று, முகப்பு வாயில் வரை ஒபாமாவின் குண்டு துளைக்காத கார் செல்ல அனுமதியுங்கள் என அமெரிக்க அதிகாரிகள் கேட்டதற்கு இன்னும் இரு நாட்களில் ஒபாமா இங்கு வரவுள்ள நிலையில், நேரமின்மையால் இது சரிபட்டு வராது என்று உ.பி. உள்துறை வட்டாரங்கள் மறுத்து விட்டன.
இதனையடுத்து, பாதுகாப்பு காரணம் கருதியே ஒபாமாவின் தாஜ் மகால் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:
Post a Comment