காங்கிரஸ் மேலிடம் மீது கடும் அதிருப்தியில் இருக்கும், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், த.மா.கா., தலைவர் வாசனை ரகசியமாக சந்தித்து பேசியதாக தகவல் பரவி உள்ளது. அதனால், த.மா.கா.,வில் அவர் சேரலாம் என்றும் வதந்திகள் உலாவரத் துவங்கி உள்ளன.
கடந்தாண்டு நடந்த லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்த பின், கட்சியில் பெரும் மாற்றம் ஏற்படும் என, சிதம்பரம் எதிர்பார்த்தார். அத்துடன், கட்சியின் தேசிய ஊடக பிரிவு தலைவர் அல்லது பொருளாளர் பதவி, தனக்கு கிடைக்கும் என நம்பினார்.
ஆனால், காங்., தலைவர் சோனியாவும், துணைத் தலைவர் ராகுலும், சிதம்பரத்திற்கும் பதவி கொடுக்க விரும்பவில்லை. இதனால், அதிருப்தியில் இருந்த சிதம்பரம், தன் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கும், தமிழக காங்கிரசில் முக்கியத்துவம் அளிக்கப்படாததால் எரிச்சல் அடைந்தார்.
இதற்கிடையில், 'ஜி 67' என்ற இளைஞர் அமைப்பை உருவாக்கி, கார்த்தி சிதம்பரம் கூட்டம் நடத்தினார் என்பதற்காக, தமிழக காங்., தலைவர் இளங்கோவன், அவருக்கு நோட்டீஸ் அனுப்பியிருப்பதும், அதை கட்சி மேலிடம் கண்டு கொள்ளாததும், சிதம்பரத்தை கோபத்தின் உச்சிக்கே செல்ல வைத்துள்ளது. அதனால், த.மா.கா., தலைவர் வாசனுடன் இணைந்து செயல்பட, அவர் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக, தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:
கார்த்தி சிதம்பரம் மீது இளங்கோவன் நடவடிக்கை எடுத்தால், காங்கிரசில் இருந்து விலகி மீண்டும் ஜனநாயகப் பேரவையை ஆரம்பிக்க, சிதம்பரம் முடிவெடுத்துள்ளார். அத்துடன், த.மா.கா., தலைவர் வாசனுடன், அரசியல் ரீதியாக இணைந்து செயல்படவும் திட்டமிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, வாசனை அவர் ரகசியமாக சந்தித்து பேசி உள்ளார். இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. வாசனுடன் இணைந்து செயல்பட சிதம்பரம் தீர்மானித்தால், அவர் காங்கிரசில் இருந்து விலகி, த.மா.கா.,வில் இணைவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

No comments:
Post a Comment