நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்நாட்டு அணிக்கெதிராக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது. இதற்காக அந்த அணி வீரர்கள் கிரைஸ்ட்சர்ச் நகரில் உள்ள ஒரு ஓட்டலில் பாகிஸ்தான் வீரர்கள் தங்கியுள்ளனர். அந்த அணி வீரர்களில் ஒருவரான ஹாரிஸ் சொகைல் தங்கியிருந்த அறையில் படுக்கை தானாக ஆடியதால் அலறியடித்து அவர் அறையை விட்டு வெளியேறினார்.
ரிட்ஜஸ் லாட்டிமர் ஓட்டலில் உள்ள தனது அறையில் படுக்கையின் மீது சொகைல் படுத்துக்கொண்டிருந்தபோது, இயற்கைக்கு முரணாக படுக்கை தானாக ஆடியது. இதைக்கண்டு மிரண்ட அவர் துண்டை காணோம், துணியை காணோம் என ரூமை விட்டு அலறியடித்து வெளியே ஓடி வந்தார். உடனடியாக பயிற்சியாளரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட சொகைல் படுக்கை தானாக ஆடியது குறித்து கூறியுள்ளார். அவர் அந்த ரூமுக்கு விரைந்து வந்து பார்த்த போது, சோகைல் நடுக்கத்துடன் நின்றிருந்தார். அப்போது அவருக்கு லேசாக காயச்சலும் காணப்பட்டதாக கூறப்படுகிறது.
தனது படுக்கை ஆடியதற்கு காரணம் பேய் தான் என சொகைல் கூற, ஓட்டல் நிர்வாகமோ அங்கு பேய் நடமாட்டம் எதுவும் இல்லை என்று கூறியது குறிப்பிடத்தக்கது. சொகையிலின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வரும் மருத்துவ குழுவினர், தற்போது அவர் நல்ல உடல் நலத்துடன் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment