கேரளாவில் நடக்க உள்ள தேசிய விளையாட்டு போட்டி தொடக்க விழாவில் மோகன்லாலின் ‘லாலிசம்' இசை குழு நிகழ்ச்சியை நடத்துவதற்காக ரூ.2 கோடி சம்பளம் கேட்டிருப்பதற்காக இயக்குனர் வினயன் கண்டனம் தெரிவித்திருந்தார்.
சச்சின் டெண்டுல்கர் இலவசமாக நிகழ்ச்சியில் பங்கேற்கும்போது மோகன்லால் தனது இசை குழு நிகழ்ச்சிக்காக பெரும் தொகையை ஏன் வசூலிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இதற்கு மோகன்லால் சார்பில் லாலிசம் இசை குழு நிறுவனர் ரதீஸ் வேகா பதில் அளித்திருக்கிறார். ‘மோகன்லால் எந்த கட்டணமும் இசை நிகழ்ச்சிக்காக வசூலிக்கவில்லை.
இசைக் குழுவில் பாடகர்கள் கார்த்தி, உதித் நாராயணன், ஹரிஹரன், சுஜாதா உள்ளிட்ட பலர் பாடல் பாடுவதுடன் இசை கலைஞர்கள் பங்கேற்கிறார்கள். அவர் களை அழைத்து செல்வது உள்ளிட்ட பல்வேறு செலவுக்கே பெரும் தொகை தேவைப்படும்.
இதற்கான செலவை ஏற்பது இயலாத காரியம். இதை புரிந்துகொள்ளாமல் மோகன் லால் மீது புகார் கூறியிருப்பது அவருக்கு வேதனை அளித்திருக்கிறது. சச்சின் டெண்டுல்கர் இலவசமாக பங்கேற்கிறாரே என்கிறார்கள்.
அவர் தனிப்பட்ட முறையில் வருவதற்கும் இசை குழு கலைஞர்களுடன் நிகழ்ச்சி நடத்துவதையும் ஒப்பிடக்கூடாது.இவ்வாறு ரதீஸ் வேகா கூறினார்.

No comments:
Post a Comment