Tuesday, January 27, 2015

ஹன்சிகா எடுத்த திடீர் முடிவு அதிர்ச்சியில் நடிகர்கள்

தற்போதைய தமிழ் சினிமா நடிகைகள் போட்டியை சமாளிக்க முத்த காட்சிக்கு இறங்கி வருகிறார்கள். புதுமுக கதாநாயகிகளிடம் முத்த காட்சியில் நடிக்க வேண்டும் என்ற நிபந்தனைகளுடனேயே புதுப்படங்களில் டைரக்டர்கள் ஒப்பந்தம் செய்கின்றனர். 

தணிக்கை குழுவினரும் இது போன்ற காட்சிகளுக்கு தற்போது கத்தரி போடுவது இல்லை. முன்னணி கதாநாயகிகளையும் முத்த காட்சிகளில்
நடிக்குமாறு இயக்குனர்கள் நிர்ப்பந்திக்க தொடங்கியுள்ளனர். பல நடிகைகள் இதை ஏற்றுக் கொண்டு நடித்தும் வருகிறார்கள்.

ஆனால் ஹன்சிகா இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. இதுகுறித்து அவர் கூறும்போது, முத்த காட்சிகளில் நான் நடிக்க மாட்டேன் என்றார். கணவன், மனைவி, குழந்தைகள் என குடும்பத்தோடு படங்களை பார்க்க வருவதால் இந்த காட்சிகளை தவிர்க்கிறேன் என்கிறார்.

தமிழ், தெலுங்கில் ஹன்சிகா தற்போது பிசியான நடிகையாக இருக்கிறார். சிம்புவுடன் ‘வாலு’, ‘வேட்டை மன்னன்’, ஜெயம் ரவியுடன் ‘ரோமியோ ஜூலியட்’, விஜய் ஜோடியாக ‘புலி’, ஜெயப்பிரதா மகன் சித்து ஜோடியாக ‘உயிரே உயிரே’ போன்ற படங்களில் நடிக்கிறார். இவற்றில் ‘வாலு’, ‘உயிரே உயிரே’, ‘ரோமியோ ஜூலியட்’ பட வேலைகள் முடிவடைந்து ஒன்றன்பின் ஒன்றாக ரிலீசாக இருக்கின்றன.


No comments:

Post a Comment