Sunday, January 25, 2015

லிப் டு லிப் நடிகைக்கு ராய்லட்சுமி வக்காலத்து

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் கரீஷ்மா தன்னா, நடிகருடன் லிப் டு லிப்  முத்தம் கொடுத்ததற்கு ராய் லட்சுமி ஆதரவு தெரிவித்தார். 

மும்பையில் சல்மான் கான் நடத்தும் பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கின்றனர் பாலிவுட் ஸ்டார் கரீஷ்மா தன்னா-உபன் படேல். இவர்கள் இருவருக்கும் இடையே கெமிஸ்ட்ரி ரொம்பவே அதிகமாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறதாம். 

இருவருக்கும் இடையேயான நெருக்கம் லிப் டு லிப் முத்தம் கொடுத்துக்கொள்ளும் அளவுக்கு வளர்ந்திருக்கிறதாம். இந்த ஜோடி பற்றி இணைய தள பக்கங்களில் பத்தி பத்தியாக கிசுகிசு வருகிறது. 

இதுபற்றி ராய் லட்சுமி தனது இணையதள பக்கத்தில் கருத்து தெரிவித்திருக்கிறார். அதில்,‘நிறைய பேர் கரீஷ்மாவுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். ஒரு சிலர் மட்டும்தான் எதிர்மறையாக கருத்து தெரிவிக்கிறார்கள். 

என்ன விஷயம் என்பதுபற்றி கவலை இல்லை. ஒரு தோழி என்ற முறையில் கரீஷ்மாவுக்கு துணையாக இருப்பேன். கரீஷ்மாவுக்கு ஆதரவு சொல்லும் அதேநேரத்தில் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் யாருக்கும் நான் எதிரி இல்லை. பிக்பாஸ் போட்டியில் பங்கேற்றிருக்கும் கரீஷ்மா வெற்றி பெறுவார்Õ என கூறியுள்ளார். 


No comments:

Post a Comment